Skip to main content

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

neet exam

 

நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் நிராகரித்ததை கண்டித்து ஆளுநர் மாளிகையை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

 

அப்போது நீட் விலக்கு எதிரான மசோதாவை நிரகாரித்த ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து ஆளுநர் மாளிகையை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் 50 க்கும் அதிகமான காவலர்கள் ஆளுநர் மாளிகையை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்