Transgender people who have been vaccinated

Advertisment

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் முகாம்கள் தினமும் நடைபெற்றுவரும் நிலையில், இந்த முகாம்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நாள்தோறும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவருகிறது. அதில் இன்று (03.07.2021) திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் முகாமில் திருநங்கைகள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் திருநங்கைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து அநேக திருநங்கைகள் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.