Skip to main content

பொள்ளாச்சியில் மீண்டும்அதிர்ச்சி சம்பவம்! ஆபாசமாக நண்பனின் மனைவியை படம் எடுத்த நபருக்கு நடந்த கதி!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

கடந்த சில மாதங்களுக்கு பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அந்தப் பதற வைக்கும் வீடியோவில், "அண்ணா என்னை அடிக்காதீங்கண்ணா டிரெஸ்ஸை கழட்டிடுறேன்'' என ரிஷ்வந்த்தின் பெல்ட் அடி தாங்காமல் கதறியபடியே துடித்த ஒரு பெண்ணின் குரல் தமிழகத்தையே உலுக்கியது.அதன் பின்பு தொடர்ந்து பொள்ளாச்சியில் பள்ளியில் சம்மந்தமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

pollachi issues



இந்த நிலையில்  நண்பனின் மனைவியை ஆபாசமாக புகைப்படமெடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் கைது செய்திருக்கும் சம்பவமானது பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மாவட்டத்தில் நெகமம் எனும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே உள்ள ஆவலன்பட்டி என்ற இடத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (42). இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா(38) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.  இதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான மணிகண்டன் சுப்பிரமணியத்தின் நண்பரானார்.  சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். சுப்பிரமணியன் வேலைக்கு சென்றவுடன் அவரது நண்பரான மணிகண்டன் ரஞ்சிதாவை பார்க்க வந்துள்ளார். அப்போது  ரஞ்சிதாவிடம் அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாக காட்டி மிரட்டியுள்ளார். மேலும் தன்னுடன் ஆசைக்கு ஒத்துழைக்காவிட்டால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 


மணிகண்டனின் தகாத செயல்களை அவருடைய மனைவியிடம் ரஞ்சிதா கூறியுள்ளார். ஆனால் சந்தியா மணிகண்டனை கண்டிக்காமல் அவரை ஆதரித்து வந்துள்ளார்‌. பின்னர் செய்வதறியாது தன் கணவர் சுப்பிரமணியிடம் நிகழ்ந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். பின்னர் இருவரும் நெகமம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள சந்தியாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது பொள்ளாச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்து வருவது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.