Skip to main content

வேகமாக வண்டி ஓட்டியதை தட்டி கேட்டது தவறா? கடும் அதிர்ச்சியில் கிராமத்தினர்...

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் குமார், தயாள். இருவரும் பிப்ரவரி 16ந்தேதி இரவு குடித்துவிட்டு தெருவில் வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்த பெண்கள் மீது மோதவும் முயன்றுள்ளனர்.

 

bike




இதனை பெண்கள் சிலர் கேட்டுள்ளனர். பெண்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த 18 வயதான அபி என்கிற இளைஞனும் குமார், தயாள் இருவரிடம் கேட்டுள்ளனர். நீ யாருடா எங்களை கேட்க எனச்சொல்லி அவர்கள் இருவரும் அபியை தாக்கியுள்ளனர். தயாள் தம்பி ராகுலும் வந்து தாக்கியுள்ளான். இதில் குமார், தயாள் இருவரும் தங்களிடமிருந்த கத்தியை எடுத்து அபியின் வயிறு, இடுப்பு பகுதிகளில் குத்தியுள்ளனர்.

கத்தி குத்து வாங்கிய அபி கதறியதும், நகர் மக்கள் திரண்டதும் அவன்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அபியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டார் என தகவல் கூறியுள்ளனர். 



இதனை கேள்விப்பட்ட ஜோலார்பேட்டை போலிஸார் சம்பவயிடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். ராகுலை இழுத்துவந்து காவல்நிலையத்தில் உட்காரவைத்தனர். 

டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான டீம் தப்பி ஓடியவன்களை தேடியது. இந்நிலையில் பிப்ரவரி 17ந் தேதி மதியம் இருவரையும் கைது செய்தனர் போலிஸார். அவர்கள் மூவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்