Skip to main content

  தேர்வு முடிவுகள் வந்தும் பாதிக்கப்படும் பாரதிதாசன் பல்கலைகழக மாணவர்கள்! 

Published on 29/06/2019 | Edited on 29/06/2019

 

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 2019 ஏப்ரல் பருவத் தேர்வு முடிவுகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சிக் கல்லூரி தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியான நிலையில் பல கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு விட்டது.

 

b

 

இதனால் பல்கலைக்கழக இணைவு பெற்ற தன்னாட்சி அந்தஸ்து பெறாத கல்லூரிகளில் இளங்கலை பட்டம் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு முதுநிலை பட்டப் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

காரணம் திருச்சியில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் கடந்த மாதமே வெளியிட்டு உடனே முதுகலை பட்டபடிப்புகளுக்கான சேர்க்கையும் முடித்து வகுப்புகளும் துவங்கிவிட்டன. இதனால் பாரதிதாசன் பல்கலைகழகத்தில் படிக்கும் இளங்கலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

 

வருங்காலங்களில் இத்தகைய பிரச்சனையை ஏற்படாமல் இருக்க பல்கலைக்கழக இளங்கலை தேர்வு முடிவுகளை ஒரே சமயத்தில் வெளியிடவும் அதுவரை முதுகலைப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்காமல் இருக்க கல்லூரிகளுக்கு அறிவியல் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்