Skip to main content

மாஜி அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அளித்த 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

 

a

 

1998ம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் அருகே நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்து, காவல்துறை வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவா்களில் 16 போ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீதும் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டது. 

 

இந்நிலையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமானது பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம்  அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

சிறப்பு நீதிமன்றத்தின் மூலம் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கினால் அவா் பதவி இழக்க வேண்டும். அதன்படி பாலகிருஷ்ணா ரெட்டி தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும், அமைச்சா் பதவியையும் ராஜினாமா செய்தார்.   இதன் பின்னர், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி இன்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.   மனுவை விசாரித்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.  இதனால்,  சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.


 

சார்ந்த செய்திகள்