Skip to main content

‘கோட்டை அமீர்’ மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்- தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Applications for 'Fort Ameer' Religious Reconciliation Medal can be sent - Government of Tamil Nadu Announcement!

 

தமிழ்நாடு அரசு இன்று (19/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த கோட்டை அமீரின் பெயரால் 'கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்' ஏற்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டுச் சிறப்பாகச் சேவை செய்து வரும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. 

 

ரூபாய் 25,000- க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை அதில் அடங்கும். மத நல்லிணக்கத்திற்காகச் சேவை செய்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். இப்பதக்கம் பெற வயது வரம்பு ஏதுவுமில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்