Skip to main content

மீண்டும் பொலிவுபெற்ற அண்ணா நகர் டவர் பூங்கா…

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

 

பல மாத ஊரடங்கு முடிந்து இன்று (1/9/2020) முதல் தமிழகம் மீண்டும் தனது இயல்புநிலைக்கு மாறியுள்ளது. ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடனான ஊரடங்கு இருந்தபோதிலும் பயணம், பணி என பல கட்டுப்பாடுகளும் இருந்தது. அதனால் மக்கள் ஓரளவே வெளியே வந்தனர். இந்த நிலையில் இன்றுமுதல் 100% பணியாளர்கள், பேருந்து போக்குவரத்து என அனைத்தும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இந்த தளர்வுகளில் பூங்கா திறப்பும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சென்னை போன்ற நெரிசல் மிக்க இடங்களில் காலை நடை பயிற்சி, உடல் பயிற்சி ஆகியவைகளுக்கு பூங்காக்களை நம்பியே மக்கள் இருந்தனர். இந்த நிலையில் பல மாத ஊரடங்கு முடிவுக்கு வந்து பூங்காக்களும் இன்று முதல் திறக்கப்பட்டது. அனைத்திற்கும் அரசு ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

 

அதன்படி, பூங்காவுக்குள் நுழையும் முன் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு பின்னரே பூங்காவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது வழிகாட்டுமுறை, இதனை பின்பற்றி சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணா நகர் டவர் பூங்கா இன்று காலை திறக்கப்பட்டது, அதில் மக்கள் ஏராளமானோர் உற்சாகமாக நடைபயிற்சி, உடல்பயிற்சிகளை செய்தனர்.

 

பூங்காக்களுக்கு 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசின் வழிகட்டுமுறைகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்