Skip to main content

கருங்கற்களால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை- பெண்களுக்குள் கைகலப்பு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Ambulance unable to go due to black stones -

 

பாதையை மறித்து கற்கள் கொட்டப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. 

 

கன்னியாகுமரி மாவட்டம், வெட்டுமணி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவிட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார். அப்போது, வழியில் தனி நபர்களால் கருங்கற்கள் கொட்டப்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தங்கமணியின் குடும்பத்தினருக்கும், கருங்கற்களை வழியில் கொட்டி வைத்திருந்த குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இரு குடும்பத்தை சேர்ந்த பெண்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், அந்த பகுதிக்கு விரைந்துச் சென்று, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

பின்னர், வேறு வழியின்றி உடல்நலம் பாதிக்கப்பட்டவரை ஸ்ரெட்சரில் படுக்க வைத்து வீடுவரைத் தூக்கிச் சென்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்