Skip to main content

88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!?

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஊதிய கோடு 2019 சட்டப்பிரிவு 67 இன் கீழ் திருத்தம் மேற்கொள்ள வரைவு சட்டத்தை முன் மொழிந்து இருக்கிறது. இதில் நடைமுறையில் உள்ள நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது நாள் ஒன்றுக்கு 9 மணி நேரம் என திருத்தம் செய்கிறது. அனைத்து மத்திய மாநில அரசு ஊழியர்கள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் இது பொருந்தும். கால முறை பணி (ஷிப்ட்டூட்டி) அடிப்படையில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன்.

இது குறித்து அவர் நம்மிடம் விரிவாக பேசுகையில்...

 

88 thousand railway employees at risk of losing their jobs?

 

ரயில்வேயில் 16339 உயர் அதிகாரிகள், 38219 நிர்வாக ஊழியர்கள், 24601 கணக்கு பிரிவு ஊழியர்கள் 18898 ரயில்வே வாரியம் மற்றும் அமைச்சக பணியாளர்கள், 23978 ஸ்டோர் ஊழியர்கள், 24 மணி நேர பணிகள் மேற்கொள்ளாத சுமார் 210000 இதர பிரிவு ஊழியர்கள் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பராமரிப்பு பணிமனை ஊழியர்கள் சுமார் 140000 பேர் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்கள் பகல் நேர பணியாற்றுபவர்கள். மீதமுள்ள 8 லட்சம் ஊழியர்கள் இரவு பகல் என ஷிப்ட் டூட்டி பார்ப்பவர்கள்.

நாள் ஒன்றின் 24 மணி நேர பணியை, 8 மணி நேரம் வீதம் மூன்று பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதை 9 மணி நேர பணி என மாற்றம் செய்தால், இதே மூன்று ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வீதம் வாரத்தில் (ஓய்வு போக) ஆறு நாட்களுக்கு 18 மணி நேரம் கூடுதல் பணியாற்றுவார்கள். ஒன்பது ஊழியர்கள் இதேபோல் பணிபுரிந்தால் 54 மணி நேர பணி கூடுதலாக ஒரு வாரத்தில் நடைபெரும். திருத்தப்பட இருக்கின்ற ஒரு ஊழியரின் ஒரு வாரந்திர பணிக்கு இது (54 மணி நேரம்) சமம். இதனால் ஒன்பது ஊழியருக்கு ஒரு ஊழியர் மிச்சம்.

 

88 thousand railway employees at risk of losing their jobs?

 

இந்திய தொழிலாளர்களின் நடப்பு வருடாந்திர உழைப்பு 2162 மணி நேரம். இது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்ய, சீன நாடுகளின் உழைப்பு நேரங்களை விட அதிகம். உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வார வேலை நேரம் என்பது 35 – 48 மணி நேரம்தான். வேலை நேரம் கூட்டுவது தொழிலாளர்கள் மணம் மற்றும் உடல் சோர்வுக்கு வழிவகுக்கும். தொழில் கவனம் சிதறக் கூடும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க வழிவகுக்கும்.

நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலையை 9 மணி நேரமாக திருத்தினால் சுமார் 88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழப்பார்கள். தொழிலாளர்கள் சட்டம் திருத்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வலியுறுத்துகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்