Skip to main content

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

75TH INDEPENDENCE DAY POLICE OFFICERS SPECIAL AWARDS

 

காவல்துறையில் சீரியப் பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, காவல் ஆய்வாளர் அம்பேத்கர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சிவராமன், பழனியாண்டி, குமார் ஆகியோருக்கு சிறந்த பொதுச்சேவைக்கான காவல் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. 

 

இதேபோல், புலன் விசாரணை பணியில் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துணை ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் எனத் தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசியக்கொடி அவமதிப்பு; வைரலாகும் வீடியோ

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Indian national flag to wipe the vehicle..

 

டெல்லியில் தனது இருசக்கர வாகனத்தை இந்திய தேசியக் கொடியால் ஒருவர் துடைத்து சுத்தம் செய்யும் வீடியோ பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையொட்டி பெருமளவு மக்கள் தேசியக்கொடிகளை வாங்கி தங்கள் வீடுகளில் ஏற்றி வைத்தனர். மொத்தம் 30 கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்று தீர்ந்ததாக ஆய்வுகள் தெரிவித்தன.

 

ஆனால் தற்போது டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க நபர் தனது இருசக்கர வாகனத்தை மடித்து வைக்கப்பட்ட தேசியக்கொடியை வைத்து துடைத்து சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தான் வேண்டும் என்றே அவ்வாறு செய்யவில்லை எனவும் தவறுதலாக நடந்துவிட்டது எனவும் கூறினார்.

 

 

Next Story

பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

independence day celebration

 

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா நேற்று (15.8.2022) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்ற, மற்ற மாநிலங்களில் அந்தெந்த மாநில முதல்வர்கள் கொடியேற்றி வெகு விமர்சையாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மேலும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்கள். திரை பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வீட்டில் கொடியேற்றிக் கொண்டாடினர். 

 

அந்த வகையில்  பீச் ஃப்ரெண்ட்ஸ் குரூப் சார்பில் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மீடியா 95 பழனி ராஜ் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.