Skip to main content

3500 காய்கறி வியாபாரிகளில் 500 பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை!

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
500 out of 3500 vegetable vendors tested

 

கரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது காய்கறி மொத்த விற்பனை சந்தை பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை காய்கறி சந்தைகள் மாநகரில், சத்திரம் பேருந்து நிலையம், உழவர் சந்தை திடல், அண்ணா விளையாட்டு அரங்கம் அருகிலும், SIT அருகில் உள்ள இடங்களிலும் காய்கறி சந்தை செயல்பட்டு வருகின்றன.

.காய்கறி சந்தையில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தது. மொத்த வியாபாரம் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். சில்லரை வியாபாரம் பின்பு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடங்களில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டன.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து திருச்சியிலும் வியாபார வணிகர்களின் நலன் கருதி கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டது. பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

500 out of 3500 vegetable vendors tested

 

காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஜி கார்னரில் 150 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஜூன் 15 ஆம் தேதி தேவர் ஹாலில் சுமார் 120 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவு தற்போது வரை வெளிவரவில்லை என கூறப்படுகிறது.

அன்றைய தினமே அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள புதிய வெங்காய மண்டியில் சுமார் 160 நபர்களைத் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே நிலையில் இரண்டு டிரைவர்களுக்கு கரோனா  தொற்றிற்கு சிகிச்சை பெற்றார்கள்.

இங்கிலீஷ் காய்கறி ஊழியர் இரண்டு நபர்களுக்கும்  கண்டறியப்பட்டது. தக்காளி சில்லரை வியாபாரிக்கும் தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்கள். அப்பொழுது வரகனேரி, எடமலைப்பட்டிபுதூர் பொதுமக்களும் சிகிச்சை பெற்றனர். தற்போது மதுரம் மைதானத்தில் சுமார் 100 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

500 out of 3500 vegetable vendors tested


தற்போது வரை  ஜி கார்னர், தேவர் ஹால், புதிய வெங்காய மண்டி, மதுரம் மைதானம் என சுமார் 500 வியாபாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மொத்த வியாபாரிகள் 1500 நபர்களும், சில்லரை வியாபாரிகள் கடையில் 2000 நபர்களும், தினக்கூலி சுமைதூக்கும், கை வண்டி இழுக்கும் உழைப்பாளர்கள் சுமார் ஐந்தாயிரம் நபர்கள் இருப்பார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த, சில்லரை வியாபாரிகளும் ,கூலி தொழிலாளர்களும் உள்ள இடத்தில் தற்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணனிடம் பேசுகையில், மொத்தம், சில்லரை அனைத்து தொழிலாளர்களுக்கும் பரிசோதனையை மேற்கொண்டு வியாபாரிகள் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் காக்க வேண்டும் என்றார். வியாபாரிகள் தன்னார்வமாக பரிசோதனை எடுத்துள்ளார்கள்.கரோனா தொற்றானது அறிகுறியுடனும், சிலருக்கு அறிகுறி இல்லாமலும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காய்கறி சந்தையை பொருத்தமட்டில் மொத்த வியாபாரிகள் சில்லரை வியாபாரிகள் வியாபாரிகள் மாநகராட்சி, பகுதி, வார்டு, தெரு என வணிக கடைகள் வரை காய்கறிகள் செல்கின்றன. ஆகையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஏனென்றால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் பொதுமக்கள் நடப்பதால் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

'என் மகராணி என்னைய விட்டு போறியேடா...'-திருச்சியை அதிர வைத்த சம்பவம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இது கொலைச் சம்பவம் என  சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு 19 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். பி.ஏ ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்த ஜெயஸ்ரீ அதே ஸ்ரீரங்கம் வடக்கு சித்திர வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் கிஷோரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரின் காதலும் இரு தரப்பு வீட்டுக்கும் தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீராம் என்ற நண்பரின் வீட்டின் மாடியில் மாலை வேளையில் ஜெயஸ்ரீ கிஷோர் சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஸ்ரீராமின் நண்பர்கள் தீபக், ராகுல், ரிஷிகேஷ் ஆகியோரும் மொட்டை மாடியில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயஸ்ரீ கிஷோர் வழக்கம்போல் ஸ்ரீராம் வீட்டின் மாடியில் பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென தவறி விழுந்த ஜெயஸ்ரீக்கு ரத்த காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கிஷோர், ஸ்ரீராம் ஆகியோர் அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பின் தலையில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். திருமணம் செய்து கொள்ளலாம் என ஜெயஸ்ரீ கிஷோரிடம் கூறியதாகவும் ஆனால் தற்பொழுது திருமணம் வேண்டாம் என கிஷோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அப்பொழுது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அருகில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைகளாலே கிஷோர் உடைத்துள்ளார். இதனால் அவருடைய கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்த  ஸ்ரீராம் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ மாடியிலிருந்து தவறி விழுந்ததாக கூறி அவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ஜெயஸ்ரீயை மருத்துவர்கள் பரிசோதித்து அவர் உயிரிழந்ததை தெரிவித்ததும் உடன் வந்த கிஷோர் உள்ளிட்ட அத்தனை பேரும் தப்பித்து ஓடி தலைமறைவாகினர். உண்மையாக ஜெயஸ்ரீ தவறிவிழுந்து உயிரிழந்தால் ஏன் நண்பர்கள் அனைவரும் தலைமறைவாக வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.

இது தொடர்பாக போலீசார் தேர்தல் வேட்டை நடத்திய நிலையில் கரியமாணிக்கம் பகுதியில்  உள்ள ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் ஐந்து பேரும் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அடைக்கலம் தந்த ஸ்ரீ கிருஷ்ணனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் கிஷோர் அந்த பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் தந்தையிடம் ஜெயஸ்ரீயின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது கண்ணீர் விட்டு கதறி அழுத அவரது தந்தை, ''அப்பா உனக்கு என்ன பாவம் செய்தேன்... என் மகராணி என்னைய விட்டு போறியேடா... நான் என்ன பாவம் செஞ்ச... கொன்னுட்டாங்களே பாவிங்க எல்லாம்... யாருக்காகவோ உன்னை இழந்துட்டியேடா...'' என்று கதறி அழுதது நெஞ்சை உறைய வைத்தது.