Skip to main content

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய்-தமிழக அரசு அறிவிப்பு!  

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

 2,000 rupees for corona relief financial assistance to transgender people - Government of Tamil Nadu announces!

 

திருநங்கைகளுக்கு கரோனா நிவாரண நிதி உதவியாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு கரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் அறிவித்திருந்தது. முதல் தவணையாக 2,000 ரூபாய் மே மாதத்திலேயே வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படுவதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

 

இந்நிலையில் திருநங்கைகளுக்கும் கரோனா நிவாரண நிதியாக 2,000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 6,553 திருநங்கைகள் பலன் பெறுகிறார்கள். அதேபோல் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள 2,953 திருநங்கைகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. திருநங்கைகளுக்காக வருவாய் துறை சார்பாக ஏற்கனவே ஆணையம் ஒன்று உள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினராக இவர்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு வட்டார அளவிலும் இதற்கான அலுவலகங்கள் இருக்கின்றன. அங்கே சென்று பெற்றுக் கொள்ளலாம். அதற்கான உறுப்பினர் அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'எல்லாம் சமஸ்கிருதமா?'-அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
'Everything is Sanskrit?'- Tamil Nadu Chief Minister's letter to Amit Shah

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

Next Story

அவகாசம் கேட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்; வெளியான திடீர் அறிவிப்பு

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Omni bus owners asked for time; Sudden announcement

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க அவகாசம் நீட்டித்து தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிமாநில ஆம்னி  பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து  தற்போது வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே திங்கட்கிழமை வரை தமிழகத்தில் வெளிமாநில  பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் போக்குவரத்து துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.