Skip to main content

எனக்கு கொள்ளிபோடுவான்னு இருந்தேனே... ரயில் விபத்தில் பலியான +2 மாணவனின் பெற்றோர் கதறல்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

 

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரயில் இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகள் படிக்கட்டில் தொங்கிகொண்டு பயணித்தனர். பரங்கிமலை ரயில்நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி பயணிகள் சிலர் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் சிலர் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

 


பலியானவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதில் தாம்பரம் ஜெயகோபால் கரோடியாக பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் பரத் (வயது 16) என்ற மாணவனும் உயிரிழந்தார். தகவலை அறிந்த அவரது தந்தை ராஜேந்திரன், தாயார் ஜெயா மற்றும் உறவினர்கள் பதறி அடித்து மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பிரபுவின் பெற்றோர் கதறி அழுதனர்.

 

 

 

 


ராஜேந்திரன் தனது மகன் பிரபுவின் உடலை பார்த்து கீழே விழுந்து புரண்டார். எனக்கு கொல்லிபோடுவான்னு இருந்தேனே... அவனுக்கு கொல்லிப்போடுற மாதிரி ஆயிப்போச்சே... என் உசுரு போயி.. அவன் இந்த உலகத்துல இருக்கக் கூடாதா... என்று கதறி தரையில் விழுந்து புரண்டு அழுதார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் அனைவரையும் கண்ணீர் விட வைத்தது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்