Skip to main content

100 பவுன் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி!  திருட்டு நகைகளை வாங்கிய பிரபல அடகுகடைகாரர் தலைமறைவு!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
Husband and wife


 


கடந்த 15 வருடங்களுக்கு திருச்சி போலீசாருக்கு சிம்ம சொப்பமாக இருந்த இலங்கை தம்பதியினர் இலங்கைக்கு விமானம் மூலம் தப்ப முயன்றபோது திருச்சி போலிசில் வசமாக சிக்கி னர். கணவன் மனைவியான தாங்கள் 100 பவுன் நகைகளுக்கு மேல் திருடியுள்ளதாக பகீர் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். கைதான இலங்கை அகதி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுயிருக்கிறான். 

 

 


திருவரம்பூர் துவாக்குடியை அடுத்து உள்ள வாழவந்தான் கோட்டையில் வசிக்கும் அகதிகள் முகாமில் வட்டி தொழில் செய்து வருபவர் 50 வயதான இலங்கை அகதி தேவகுமாரி. இவர் கடந்த 4ம் தேதி அய்யம்பட்டி சாலையில் நடந்து செல்லும் போது 3 பேர் கத்தியை காட்டி 10 பவுன் நகைகளை மிரட்டி வாங்கி சென்றனர். இதில் சந்தேகத்தின் பெயரில் அகதிகள் முகாமில் உள்ள சிவகுரு, விக்னேஷ் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து துவாக்குடி போலிசிடம் ஒப்படைத்தனர். இவர்களின் கூட்டாளி ராஜா என்கிற கெட்டியான் பாண்டி என்பவன் நாமக்கல் அகதிகள் முகாமை சேர்ந்தவன் என்றும் அவன் கணவன் மனைவியாக தலைமறைவாகி இருப்பதும் போலிசுக்கு தெரியவந்ததும் தீவிர விசாரணையில் இறங்கினர். 

கடந்த 2 மாதங்களாக பூட்டிய வீடுகளில் ஏறி நகைகளை திருடுவது மிக அதிகரித்து வந்தது. எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தும் திருடனுக்கு பூட்டிய வீடு எப்படி சரியாக தெரிகிறது என்கிற கேள்விக்கு விடை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் தான், இளம் வயது கணவன் மனைவியாக இரண்டு பேர் திருட்டு நடந்த இடத்தில் அருகே உள்ள தெருக்களில் எல்லாம் வீடு வாடகைக்கு கேட்டு வந்திருப்பது தெரியவந்தது. 

 

 


அப்படி வீடு வாடகைக்கு கேட்டு தெருக்களில் சுற்றும்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பட்டபகலில் அந்த வீடுகளில் தங்கள் கைவரிசைகளை காட்டியிருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் குறித்து அனைத்து காவல்நிலையத்திற்கும் தெரியப்படுத்தி வைத்திருந்த நிலையில் இலங்கைக்கு தப்பி செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் தனிப்படை போலிசாரால் என்.ஐ.டி அருகே பிடிப்பட்டனர்.

பிடிப்பட்டு விசாரணையில் 2004 முதல் சைக்கிள் மற்றும் பைக் திருட்டுவது பழக்கம் ஆகி என்மீது நாமக்கல் காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்தனர். இதன் பிறகு 3 வருடம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தனியாக இருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தேன். இதன் பிறகு தான் திருச்சியை சேர்ந்த விக்னேஷ், சிவகுரு ஆகியோருடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்தேன். குறிப்பாக இதுவரைக்கும் 100 பவுனுக்கு மேல் கொள்ளையடித்த நகைகளை எல்லாம் நாமக்கலில் உள்ள அடகு நகைகடைகளில் வைத்து பணம் பெற்று ஜாலியாக இருந்தோம். தற்போது இலங்கை செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். 

 

 


100 பவுன் நகைகளை நாமக்கல் நகை அடகுகடைகளில் அன்றைய நகை விலைக்கே பணம் கொடுப்பதால் அங்கே விற்றேன் என்று அதற்கான ரசீதுகளையும் கொடுத்திருக்கிறான். இதை கேட்டதும் போலிசார் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த நிலையில் திருவரம்பூர் தனிப்படை போலிசார் திருட்டு நகைகளை வாங்கின நாமக்கல் நகை அடகு கடைக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். நாங்கள் வாங்கியிருந்தாலும் எங்களால் அந்த நகைகளை திரும்ப கொடுக்க முடியாது என்று நகை அடகு கடையில் பணியில் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் விசாரணைக்கு நகைக்கடையின் மேலாளர் இரண்டு பேரையும்  அழைத்து சென்றனர் போலீசார். வாய்ப்பு இருந்தால் அடகு நகைகடை நிர்வாகியையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறோம் என்கிறார்கள் தனிப்படை அதிகாரிகள். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.