Skip to main content

தமிழ்நாடு வேகிறது.. பேசுங்கள் மோடி! - சத்ருகன் சின்கா ஆதங்கம்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018

தமிழ்நாடு வெந்துகொண்டிருக்கும் இந்த வேளையிலும் மவுனமாகவே இருப்பீர்களா மோடி என பா.ஜ.க. மூத்த தலைவர் சத்ருகன் சின்கா கேள்வியெழுப்பியுள்ளார். 
 

Shatrugan

 

 

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இந்தப் படுகொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இதுகுறித்து தங்கள் இரங்கல்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடியோ கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பிட்னெஸ் சேலஞ்சுக்கு அதிவேக பதில்சொல்லிவிட்டு, தூத்துக்குடி படுகொலைகள் குறித்து மவுனம் காக்கிறார்.

 

 

இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸார், இதுவே நீங்கள் பேசவேண்டிய நேரம்! கத்துவா வன்புணர்வு குறித்து பேசவில்லை. பெட்ரோல் விலை குறித்தும் வாய்திறக்கவில்லை. தூத்துக்குடியில் இரக்கமின்றி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும் அதையே செய்வீர்களா?! அப்பாவி குடிமக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த, அதுவும் தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டு... யார் அனுமதி தந்தது? காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கும்போது தாங்கள் எதுவுமே சொல்லவில்லை. இப்போது தமிழகம் வெந்துகொண்டிருக்கிறது. வாய்ச்சொல்லில் தோரணையான ஆர்.எஸ்.எஸ். தொண்டரின் குரலை இப்போதாவது நாம் கேட்கமுடியுமா?’ என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்