Skip to main content

“எங்கேயும் சொல்லவில்லை... இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள்” - தமிழிசை சௌந்தர்ராஜன் 

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

"They didn't say anywhere.. they are taking this in their hands again" Tamilisai Soundarrajan

 

ஐஐடி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் இந்தியில் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. 

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15ம் தேதி அன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கன்னியாகுமரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எந்த இடத்திலும் மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டும் என்றோ மாநில மொழியை மீறி இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்றோ எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள். உடலையும் உயிரையும் போல் தமிழகத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று சொல்வது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” - தமிழிசை

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Tamilisai said It is shocking to say that the DMK regime is Kamaraj regime

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வந்தே பாரத் ரயில் தற்போது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ரயில் திட்டத்தினை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி. இதனைப் பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்து ஆள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதனைப் பொதுமக்கள் நம்ப மாட்டார்கள். பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சி திட்டத்தையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேலும் விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரயில் வர உள்ளது.

நடைபெற்று முடிந்த நான்கு கட்டத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது. எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார். தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் திமுகவும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் திமுகவின் சாதனை. திமுகவும் காங்கிரசும் கூட்டணியில் இருந்துக் கொண்டு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை எனவே தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

காவிரி பிரச்சனையில் அதிகாரிகள் நேரடியாக சென்று விவாதிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்க ஏன் தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு காவிரியில் தண்ணீர் கொண்டு வருவதில் தீவிரம் காட்டவில்லை என்று தனக்கு தோன்றுகிறது. கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் எனவே திமுகவினருக்கும் சிறைத்துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிக அளவில் தொடர்பு உள்ளது.

கஞ்சா பொருத்தவரையில் காவல்துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் எந்த அளவில் தொடர்பு உள்ளது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துகள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். எனவே போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உயர்நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா பொருட்கள் விற்பனை தொடர்பாக சிறைத்துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கலாச்சாரம் என்பது கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது. தமிழகம் போதைக் கலாச்சாரமாக மாறி வருவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதலாக்க வேண்டும். கலைஞரைப் பற்றி 9 மற்றும் 10 ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது. தற்போது எட்டாம் வகுப்பிலும் கலைஞரைப் பற்றி இடம்பெற்றுள்ளது.

பாஜக கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது. ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும். எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிய செய்திகள் புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.

தமிழகத்தில் எத்தனை முதல்வர்கள் சிறப்பாக பணியாற்றினார்கள். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சொல்கிறார் இந்த ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று; இது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியை காங்கிரஸ் ஆட்சி என்று சொல்லிவிட்டார்” என்றார்.

Next Story

“தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்” - ஆளுநர் தமிழிசை பெருமிதம்

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Governor Tamilisai is proud of the opening of Parliament with "heartfelt thanks".

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதை வரவேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்’ எனக் குறிப்பிட்டு ஆரம்பித்துள்ளார். அதில், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடைசூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.

 

நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும்,தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்திருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டது. அன்று பாடியது பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.

 

யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்றுப் புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பாரதப் பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.