Skip to main content

ஸ்டான்லி மருத்துவமனையின் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி... முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோராமல் தனி நபருக்கு முறைகேடாக வழங்கியதைக் கண்டித்து பொதுப்பணித்துறை அலவலகத்தை ஒப்பந்ததாரர்கள் முற்றுகையிட்டனர். 

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான புராதான கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை உடைத்து தகர்ப்பதற்கு எந்த ஒரு ஒப்பந்தமும் கோராமல் அவசர அவசரமாக கரோனா அச்சுறுத்தலைப் பயன்படுத்தி தனி நபர் ஒருவருக்கு முறைகேடாகக் கொடுத்துள்ளார்கள். டெண்டரே விடாமல் மிகவும் குறைந்த அளவு கொடுத்துள்ளனர். 

 

இதனால் அரசுக்கும் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடாக இதுபோன்று தனி நபருக்கு பணிகளை ஒப்படைப்பதால், மற்ற ஒப்பந்ததாரர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறினர். 

 

சுமார் 150 பேர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகையிட்டு, இடிக்கும் பணியை எந்த அடிப்படையில் வழங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து தற்காலிகமாக அதனை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் கூறிய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்