Skip to main content

“ஒருவேளை நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்களோன்ற பயம் தான்” - சீமான்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Seeman on the arrest of Senthilbalaji

 

“ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக என 4 கட்சிகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். திமுக பாதிக்கப்படும் போது இது ஜனநாயகமா, இது அத்துமீறல், பழிவாங்கும் நடவடிக்கை என்பார்கள். ட்விட்டரில் செய்தி போட்டால் உங்களை தூக்கி குண்டாஸில் போடுகிறார்கள். அரசுக்கெதிராக கருத்து சொன்னாலே குண்டாஸ் போடுகிறார்கள். அப்போதெல்லாம் இல்லாத கருத்து சுதந்திரம் இப்போது வருகிறது.

 

செந்தில் பலாஜியை கைது செய்த போது அத்தனை அமைச்சர்களும் சென்று பார்க்கிறார்கள். இதுவே கனிமொழியை கைது செய்தபோது கூட சென்று பார்க்கவில்லை. அடுத்து ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் தான். அதுதான் காரணம். வருவாய் குவிக்கிற இரு இலாகாக்கள் கனிமொழியிடம் இல்லை. இவரிடம் உள்ளது. அதனால் அவரை பார்க்க வேண்டியுள்ளது.  

 

ஊழலை பற்றி பேச பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக என 4 கட்சிகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது? எனக்கு இருக்கிறது, நான் பேசலாம். பாஜக கர்நாடகத்தில் தோற்றதே 40% ஊழல் குற்றச்சாட்டு என்கிறார்கள். எடியூரப்பாவை முதல்வராக இருக்கும் போது எதற்கு இடைநீக்கம் செய்தார்கள். அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தான். மகாராஷ்டிராவில் 40 சட்டமன்ற உறுப்பினர்களை வாங்கினீர்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 130 கோடி பணம் கொடுத்தீர்கள். இப்படி பணம் கொடுப்பது லஞ்சமா, இல்லையா? ஃபிரான்ஸ் போர் விமானம் விவகாரத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? ஜெயலலிதா ஆட்சியில் நடந்த இந்த ஊழலை இவ்வளவு காலம் விட்டு இப்போது நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?” எனக் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி; 33வது முறையாக நீட்டித்த நீதிமன்றம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Senthil Balaji featured in the video; Court extended for the 33rd time

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது வரை 33வது முறையாக அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.