Skip to main content

“தமிழ் நாட்டிற்குத் துரும்பைக் கூட வழங்காதவர் ரஜினிகாந்த்...” - காங்கிரஸ் எம்.பி.

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

"Everything has been leakage in Tamil Nadu for 10 years ..." - Karur MP Jothimani


திண்டுக்கல், வேடசந்தூர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

 

இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க, மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களின் கீழ், குழு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல காங்கிரஸ், தி.மு.க சார்பில் சர்வேவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகுதான் வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறதா என்பது பற்றி தெரியவரும்.

 

யார் மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து, களத்தில் போராடுகிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முடிவு எழுதப்பட்டதுதான். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 தொகுதியில் வெற்றி பெறும். நாளுமன்றத் தேர்தலில் எப்படிக் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணி இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். 

 

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் உள்ள ஷட்டர், பழுது ஏற்பட்டு லீக்கேஜ் ஆவதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகாலமாக தமிழகத்தில் எல்லாமே லீக்கேஜ்தான். விவசாய, மக்களுக்குச் சேரவேண்டிய திட்டங்களும் லீக்கேஜ்தான். மக்கள் அதை உணர்ந்துள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் லீக்கேஜ்களை அடைக்க தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சியை மக்கள் அமர்த்துவார்கள். 


நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு, 40 நாட்கள் படப்பிடிப்பிற்குச் செல்கிறார். இது போல, தலைவர்களை நான் பார்க்கவில்லை. இந்த கரோனா ஊரடங்கின்போது மிகப்பெரிய பணக்காரரான ரஜினிகாந்த், அவர் நினைத்திருந்தால் பல கோடி ரூபாயை அரசாங்கத்திற்கு கரோனா நிவாரண நிதியாகக் கொடுத்து இருக்கலாம். பொது மக்களுக்கும் உதவி செய்திருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லையே. அதுபோல், தமிழ் நாட்டிற்குத் துரும்பைக் கூட வழங்காதவர் ரஜினிகாந்த். அவருக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்.” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.