Skip to main content

காவல்துறையினருக்கு நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும் ;வாசன் 

Published on 09/03/2018 | Edited on 09/03/2018
vasan

 

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் 237-வது வெங்கட்ரமண பாகவதரின் ஜெயந்தி விழாவினை தொடங்கி வைக்க வருகை தந்த தமாகா தலைவர் ஜி. கே./ வாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

 

அப்போது அவர்,  ‘’திருச்சியில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்த சம்பவம் இன்றைய ஆட்சியின் அவல நிலைமையை காட்டுகிறது.  அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினருக்கு நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்.  மார்ச் 30ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால் தமாகா மிகப்பெரிய அளவில் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்தும், காவிரி டெல்டா பாசன பகுதிகளில் இருந்து ஓஎன்ஜிசி வெளியேற்ற வேண்டும், டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், சென்னை சட்ட கல்லூரியை இடமாற்றம் செய்ய கூடாது, அரசியல் கட்சி தலைவர்கள் கொள்கைகளில் வேறுபாடு இருந்தாலும் சர்ச்சை பேச்சுக்களை தவிர்க்க வேண்டும், தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான் ஏற்படும், தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து தமாகா முடிவு செய்யும், எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய அதிமுக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும், தாமதித்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கர்நாடக செல்லும் அபாயமுள்ளது" என்று கூறி முடித்தார். 

சார்ந்த செய்திகள்