Skip to main content

திமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019

கடந்த வாரம் 16 அம்ச கோரிக்கையோடு தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வுக்கும் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே ஒரு இணக்கமான போக்கை உருவாக்க ஒரு முயற்சி நடப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் தான், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பிரதமர் மோடியிடம் கொடுத்துள்ளாரகள். அப்போது, கலைஞர் எழுதிய "குறளோவியம்' புத்தகத்தையும், கலைஞருக்காகத் தயாரிக்கப்பட்ட நினைவு மலரையும் பரிசளித்தார்கள். புத்தகங்களைத் தன் இரு கைகளிலும் ஏந்தியபடி மோடி போஸ் கொடுக்க, அது பரவலாக ஷேர் ஆனது. ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் தி.முக. எம்.பி.க்களிடம் அக்கறையாக விசாரித்திருக்கிறார் மோடி.
 

dmk



மேலும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் சந்தேகப் பார்வை அதிகமாகியிருப்பதாக கூறுகின்றனர். மோடியுடன் தி.மு.க. டீல் போட்டிருப்பதாக பார்க்கிறார்கள். டெல்லியில் என்ன நடக்குது என்று முதல்வர் எடப்பாடி விசாரிக்க, டெல்லித் தரப்போ, மத்திய அரசுக்கு எதிராக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்திருந்த ஸ்டாலின், கவர்னரை சந்தித்தவுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றார். காரணம் அந்த சந்திப்பில் சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. அப்போது தி.மு.க. கொடுத்த புகார்களின் அடிப்படையில் எடப்பாடி அரசுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவும் இப்போது மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்று எடப்பாடிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது மேலும் அவரைக் கவலையடையச் செய்திருப்பதாக கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்