Skip to main content

‘பாசிச பிஜேபி ஒழிக’  என கோஷம் - நந்தினி கைது

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
Law student Nandhini



சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பு ‘பாசிச பிஜேபி ஒழிக’ என கோஷமிட்ட சட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது தந்தை ஆனந்துடன் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சென்னை தி.நகர் வைத்தியராம் தெருவில் உள்ள பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் முன்பு தனது தந்தை ஆனந்துடன் நந்தினி வந்தார். 
 

அப்போது கையில், ‘பாசிச பிஜேபி ஒழிக’ என எழுதப்பட்ட பதாகையை வைத்திருந்தார். பாஜக அலுவலகம் முன்பு திடீரென பாஜக மற்றும் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அப்போது, பாஜ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அக்கட்சியினர், மாணவியிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
 

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்