Skip to main content

ஒரு தொகுதிக்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள அ.தி.மு.க. - பா.ஜ.க. : கே.எஸ்.அழகிரி

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

 

அப்போது, இந்திய ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு அளவு கடந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் உண்டு. தமிழகத்தில் பணத்தின் மூலம் தேர்தலை நடத்துகிற ஒரு பண ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகத்தையே கேலி பொருளாக ஆக்குகிற செயல் இது. பணப்புழக்கமே இல்லாத ஒரு தேர்தலை நடத்திக்காட்டுவோம் என்ற உறுதிமொழியை இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு அளிக்க வேண்டும்.




எனவே இந்திய தேர்தல் ஆணையம் தமிழக மக்களுக்கு ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டும். பணப்புழக்கமே இல்லாத ஒரு தேர்தலை நடத்திக்காட்டுவோம் என்ற உறுதிமொழிதான் அது. அப்போதுதான் தமிழகத்தில் சுதந்திரமான ஒரு தேர்தல் நடக்கும். உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 

ks alagiri congress


 

இந்த தேர்தலில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த பணம் ஆங்காங்கே கொண்டுபோய் வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வளவு பணம் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் புழங்குமானால் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய முடியும். சிறிய கட்சிகள், ஏழைக்கட்சிகள் என்ன செய்ய முடியும். எனவே இது பகல்கொள்ளை.
 

பணப்புழக்கத்தின் காரணமாக தேர்தலில் தேர்தல் ஆணையமும், இந்திய ஜனநாயகமும்தான் தோல்வி அடைகிறது. தபால் ஓட்டுக்கு கூட ஒரு அமைச்சர் பேரம் பேசும் அளவுக்கு மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் பணத்தின்மூலம் தான் தேர்தல் நடைபெறுகிறது என்பது உலகமே அறிந்த விஷயம்''. இவ்வாறு கூறினார்.
 

 


 

சார்ந்த செய்திகள்