Skip to main content

செந்தில்பாலாஜி செம கடுப்பில் இருந்தால் தான் நல்லது –அன்பில் மகேஷ்

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

 

உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர் அணி உறுப்பினர்களை நேர்காணல் செய்து பொறுப்பாளர்களை நியமிக்கிறேன் என்று சில ஊர்களுக்கு நேரடியாக சென்று நேர்காணல் நடத்தினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தீடீரென இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் இளைஞர் அணியில் உறுப்பினர்களை இரண்டு மாதத்தில் சேர்க்க வேண்டும். இப்போது இருக்கும் இளைஞர் அணி நிர்வாகிகளை மாற்ற வேண்டாம். அப்படி மாற்றினால் தேர்தலில் அது நமக்கு சரியாக இருக்காது என்று உறுப்பினர் சேர்க்கையை தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தி சென்னையில் இருந்தே வீடியோ கான்பிரன்சில் பேசி உற்சாகப்டுத்தி வருகிறார்.

 

karur dmk



சமீபத்தில் செந்தில்பாலாஜி, இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கைக்கு கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மையங்களை ஏற்படுத்தியிருருந்தார். கரூர் 80 அடி சாலையில் மிகப் பிரமாண்டமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
 

இதை துவக்கி வைத்து பேசிய திருச்சி திருவரம்பூர் எம்.எல்.ஏவும், இளைஞர் அணியின் மாநில துணை செயலாளரும், இளைஞர் அணி மண்டல பொறுப்பாளருமான அன்பில் மகேஷ், இளைஞரணி மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். அதனால் செந்தில் பாலாஜி என் மீது செம கடுப்பில் மிகவும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்தது. நீங்கள் என் மீது கடுப்பில் இருக்கிறீர்களா? என்று செந்தில்பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சிரித்தார். ஆனால் செந்தில்பாலாஜி கடுப்பாக தான் இருக்கிறார்.


 

 

முதன்முறையாக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் போட்டபோது, தொகுதிக்கு பத்தாயிரம் பேரை சேர்க்க வேண்டும் என்று இளைஞரணி செயலாளர் கூறியபோது அதையும் தாண்டி 15,000 உறுப்பினர்களை சேர்ப்பேன் என்று செந்தில்பாலாஜி சொன்னார். அப்போதும் அவர் கடுப்பாக இருப்பதை கண்டேன்.
 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தை தூர்வாரும் பணியை செய்து முடித்தால் கரூர் மாவட்டத்தில் மூன்று இடத்தில் தூர்வாரும் பணிகளை செய்வோம் என்று கூறி ஏற்பாடுகளைச் செய்தார். அப்போதும் அவர் கடுப்பில் இருப்பதை நான் அறிந்தேன். செந்தில் பாலாஜி எப்போதும் கடைசிவரை கடுப்பாக இருக்க வேண்டும். அவர் கடுப்பாக இருந்தால்தான் கட்சிக்கு மிகவும் நல்லது என பேசினார்.


 

 

கரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளவரசு மற்றும் நன்னீயூர் ராஜேந்திரன், கரூர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் கரூர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கூட்டம் ஏதோ மாநாடு இளைஞர்கள் பட்டாளம் குவிந்து இருந்தது. கரூர் மாவட்டத்தில் நடந்த 5 இடங்களில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் மொத்தம் 5420 பேரை சேர்த்து இருந்தது குறிப்பிடதக்கது. இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை படுவேகமாக சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

சார்ந்த செய்திகள்