Skip to main content

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட கமல்..!  

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (07/05/2021) காலை 09.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர். 

 

இந்நிகழ்ச்சியில், எதிர்க்கட்சியான அதிமுக சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில், மநீம தலைவர் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். 

 

முன்னதாக, கடந்த 4ஆம் தேதி கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து தேர்தலில் வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்