Skip to main content

காஷ்மீர் விவகாரத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது சரியா? 

Published on 06/08/2019 | Edited on 06/08/2019

நேற்று மாநிலங்களிவையில் காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் 370 உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகளை மத்திய அரசு நேற்று நீக்கியது. மேலும், மாநில அந்தஸ்து நீக்கப்பட்டு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை தற்போது ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இது குறித்து  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும் போது, தினம் தோறும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது நாடாளுமன்ற அல்லது மசோதாக்கள் தயாரிக்கும் இடமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் எண்ணங்களுக்கு மாறான இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்க முடியாது என்றும், மக்களின் அமைதியே முக்கியம் என்றும் கூறியுள்ளார். 
 

dmk



மக்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணித்தினால் தான் நாடாளுமன்றத்தில் சாதிக்க பாஜக அரசு நினைக்கிறது என்றும் கூறியுள்ளார். காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலை நடத்த மத்திய அரசு மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மசோதா தொடர்பாக எங்கள் கருத்தை கூறுகிறோம். அது பற்றி முடிவெடுப்பது உங்களிடம் தான் உள்ளது என்றும் கூறினார். அதோடு, நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது சரியா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதே போல் காஷ்மீரில் தேர்தல் நடத்தி சட்டபேரவை ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  

சார்ந்த செய்திகள்