Skip to main content

''எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இறைத்தாலும் அதிலும் தாமரை மலரும்'' - மோடி பேச்சு

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

n

 

கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அடுத்த நாள் (பிப்ரவரி 1 ஆம் தேதி) 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. குறிப்பாக அதானி விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சூடுபிடிக்க வைத்துள்ளது.

 

அதானியும் மோடியும் நண்பர்கள் எனக் கூறி எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கமிட்டன. அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன. அதேநேரம் நேற்று பேசிய பிரதமர் மோடி ''நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவரும் தங்களுடைய புரிதலுக்கு ஏற்ப உரையாற்றினர். ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர். சிலர் பேசியதை கூர்ந்து கேட்டபோது அவர்களுக்கு திறனும் புரிதலும் குறைவாக இருப்பது தெரியவருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு அவர்களின் தரத்தை காட்டுகிறது'' எனப் பேசியிருந்தார்.

 

ஆனாலும் இதே எதிர்ப்பு நிலை இன்றும் இருந்தது. இந்நிலையில், இன்று பேசிய பிரதமர் மோடி, ''எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் அதிலும் தாமரை மலரும்'' எனப் பதிலளித்தார். அப்பொழுது பாஜக எம்எல்ஏக்கள் சிரித்தபடி மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்