Skip to main content

தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்...

Published on 03/04/2019 | Edited on 03/04/2019
edappadi palanisamy




தற்போது தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி, திருவைகுண்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றாக நாங்கள் இப்போது நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். கூட்டணிக்கட்சி  வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் எனக்கூறினார். 
 

முன்னதாக முதல்வர் வருவதையொட்டி சரவெடி வெடிக்கப்பட்டது. நீண்டநேரம் வெடித்துக்கொண்டிருந்ததால் முதல்வர் ‘இது என்ன இன்னைக்கு பூரா வெடிச்சுட்டு இருக்கு.’ எனக்கூறினார். இதனால் அந்த இடம் சிறிது நேரம் கலகலப்பானது. 

 

 

 

சார்ந்த செய்திகள்