Skip to main content

எடப்பாடியை வாட்டும் கவலை!

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
edappadi palanisamy


தமிழகமே பிரச்சினைக்கு மேல் பிரச்சினையில் சிக்கிக் கிடந்தாலும் மாதம் இருமுறையாவது சேலத்திற்கு விசிட் அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
 

செப்டம்பர் 1-ம் தேதி அனுப்பூரில் அம்மா உடற்பயிற்சி நிலையத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, உடற்பயிற்சியும் செய்துகாட்டி அசத்தினார். மார்பை விரித்தும், ஆர்ம்ஸை மடக்கியும், ‘மோடியின் 56 இன்ச் மார்பளவுக்கே டஃப் கொடுப்பார்போல’ என்கிற ரேஞ்சுக்கு கெத்துக்காட்டினார். அதேபோல், கருமந்துறையில் அரசு விழாவில் கலந்துகொண்ட பின், மலைக்கிராமமான அருணாவில் பழங்குடியின மக்களைச் சந்தித்து, கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்தார்.
 

மண்ணின் மைந்தர் என்கிற ரீதியில் சேலத்தின்மீது கூடுதல் அக்கறை செலுத்துவதில் தவறில்லை. ஆனால், நூறு நாட்களாக தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின்போதும், 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட போதும் செல்லாத முதல்வர்தானே, சேலத்திற்கு சண்டிங் அடிக்கிறார்’’ என்கிற விவாதம் எழுந்திருக்கிறதே.
 

சேலத்தின் மீதான எடப்பாடியின் அக்கறை குறித்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''சார்... இனிமேலும் நாம ஆட்சியைப் பிடிப்போமா என்கிற எண்ணம் அவரை வாட்டுது. அதனாலதான் கொங்குமண்டலத்து செல்வாக்கையாவது காப்பாத்திக்க நினைக்கிறாரு. சொந்தத் தொகுதியையாவது தன்னோட கோட்டையாக ஆக்கிக்கணும்னு அண்ணனுக்கு ஆசை'' என சொல்லியபடி சுற்றும் முற்றும் பார்த்தார்.



 

சார்ந்த செய்திகள்