Skip to main content

தமிழகத்தில் ஆட்சியை திமுகவிடம் ஒப்படைக்க வேண்டும். - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
kathar moideen



 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் திருச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது, 

தமிழ் மண் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிற மண். அனைவருக்கும் சகோதரத்துவத்தை உணர்த்துகிற மண். ஒன்றுபட்டால் இந்தியாவைக் காப்போம், சபரிமலை பற்றிய தீர்மானம் சிறப்பானது. இஸ்லாமிய மார்க்கத்தில் ஆண்களையும், பெண்களையும் சரி்சமமாகவே பார்க்கிறோம். அது போலவே சபரிமலை விவகாரத்தையும் அணுகுகிறோம். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை குறித்த தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவிக்கிறோம்.. பாராளுமன்ற, சட்டமன்றங்களிலும் , மக்கள் மன்றங்களிலும் விவாதிக்க வேண்டும். தேசத்தை பாதுகாக்க சமயச்சார்பற்ற, சமூக நீதி காக்கிற ஒரு கூட்டணியை உருவாக்கவும், தமிழகத்தில் ஆட்சியை திமுகவிடம் ஒப்படைக்க வேண்டும்.. மோடியின் sabka sath, sabka vikas என்கிற கோஷங்களை மோடி ஆட்சியில் sabka mouth, sabka nasty ஏற்படுகிறது எனவே அவரது ஆட்சியை அகற்ற வேண்டும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தி.மு.க கூட்டணி; ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024

 

Ramanathapuram Constituency Candidate Notification for DMK alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

மேலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர்.

அந்த வகையில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, திருச்சி சிவா, ஆ. ராசா, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

Ramanathapuram Constituency Candidate Notification for DMK alliance

இந்த நிலையில், தி.மு.க கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று (02-03-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏணி சின்னத்தில் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'பாஜக-அதிமுக கொள்கை ரீதியாக பிரியவில்லை'-இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முகமது அபூபக்கர் பேட்டி

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

'BJP-AIADMK not divided politically'-Muhammad Abubakar of Indian Union Muslim League interviewed


அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கும் இடையே நடந்த அறிக்கை போர் காரணமாக பிரிந்துள்ளார்கள் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

 

சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபூபக்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு சமய நல்லிணக்க விழாவாக முஸ்லிம் லீக் சார்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், அனைத்து சமூகங்களில் கலாசார தனித்தன்மையை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் முப்பெரும் கொள்கையாக கடந்த 25 ஆண்டுகளாக அறிவிப்பு செய்து நடத்தி வருகிறோம்.

 

தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. கட்சி அமைப்பு தேர்தல் தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களாக பிரித்து, நிர்வாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாதம் அகில இந்திய கவுன்சில் புதுதில்லியில் நடைபெறஉள்ளது. நாங்கள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். அதனுடைய ஒருங்கிணைப்பு குழுவில் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் உறுப்பினராக உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம். தொடர்ந்து தேர்தல்களம் கண்டு வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தமிழ்நாட்டில் 52 மாவட்டங்களையும், 9 மண்டலங்களாக பிரித்து நவம்பர் மாதத்தில் பயிலரங்கள் நடத்தவுள்ளோம். திமுகவோடு கொள்கை ரீதியான கூட்டணி வைத்துள்ளோம். தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், கலாதார தனித்தன்மையை பாதுகாப்பது உள்ளிட்ட கொள்கையாகும். தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் மாறக்கூடிய சூழல் உள்ளது. அண்மையில் அதிமுக, பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள்தான் சிறுபான்மையினரின் பாதுகாவலர் என தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளார்.

 

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அப்போது பல நேரங்களில் சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரினேன். அதற்கு அப்போதைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டப்பிரச்சனை விடுதலை செய்ய முடியாது என கூறினார். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த விடுதலை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்கள். அதிமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக பிரியவில்லை. அவர்களுக்குள் அதிமுகவிற்கும், அண்ணாமலைக்கு இடையே நடத்த அறிக்கைப் போர் காரணமாக பிரிந்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது மத்தியில் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு அளித்தது அதிமுக. பாஜக பல்வேறு சட்டங்களில் இரு அவைகளில் நிறைவேற்றுவதற்கு துணை நின்ற இயக்கம் அதிமுக. நிர்பந்தத்தினால் ஆதரிப்பதாக தற்போது கூறுகிறார். இதே நிர்பந்தம் நாளைக்கு வந்தால் மாறிவிடுவார் எடப்பாடி பழனிசாமி. எங்களை பொறுத்தவரை பாஜகவிற்கு மாறான கூட்டணி இந்தியா கூட்டணிதான். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிதான் நாங்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் சிறுபான்மை சமுதாயத்தினர் இந்த கூட்டணிக்குதான் வாக்களிப்பார்கள். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதி கேட்க உள்ளோம்'' என்றார்.

 

இந்த செய்தியாளர் சந்திப்பில் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பாணி, மாவட்டத் தலைவர் முகமது ஜக்கரியா, நகர தலைவர் அன்வர் அலி, நகர செயலாளர் சாகுல் ஹமீது பாகவி, பொருளாளர் அப்துல் ரியாஸ், கவுரவ ஆலோசகர் மகபூப் உசேன் ஆகியோர்  பலர் உடனிருந்தனர்.