Skip to main content

ஓ.எல்.எக்ஸ்.ல் விற்பனைக்கு வந்த கேரள காங்கிரஸ் அலுவலகம்!

Published on 10/06/2018 | Edited on 10/06/2018

கேரள மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் ஓ.எல்.எக்ஸ். இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததால், அக்கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

congress

 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள உள்ள சாஸ்தாமங்கலத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன். இந்த அலுவலகம் வெறும் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனைக்கு வரவுள்ளதாக அனீஷ் என்பவர் பிரபல விற்பனை தளமான ஓ.எல்.எக்ஸ்.ல் பதிவிட்டு இருந்தார். கட்சி அலுவலகத்தின் புகைப்படங்கள், அளவீடுகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட அவர், விருப்பமுள்ளவர்கள் காங்கிரஸ் (எம்) அல்லது முஸ்லீம் லீக் கட்சியுடன் பேசிக்கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார்.
 

முதலில் கேலிக்காக இதைச் செய்ததாக பலரும் எண்ணியிருந்தாலும், கேரள காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிக் குழப்பமே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநிலங்களவைக்கான ஒரு சீட் நிரப்பபட உள்ளது. இந்த சீட் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேறி கே.எம்.மணி என்பவரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் (எம்) கட்சியின் உறுப்பினரும், கே.எம்.மணியின் மகனுமான ஜோஷ் கே.மணிக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டிருப்பதுதான் குழப்பத்திற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

சார்ந்த செய்திகள்