Skip to main content

"இந்த அரசு எதையும் கேட்க தயாராக இல்லை" - கே.சி.வேணுகோபால் 

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

congress leader kc venugopal talks about adani joint parliament committee

 

இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின்  இரு அவைகளும் தொடங்கிய சிறிது நேரத்திலேயே  கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மீண்டும் கூடிய நிலையில் மீண்டும் அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

 

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு தொடங்கியதிலிருந்து ஆளுங்கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வந்த நிலையில், தற்போது எம்.பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்து வருகிறது. இதனால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று 11 வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

 

இதனை தொடர்ந்து  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "அதானி விவகாரம் பற்றி இந்த அரசு எதையும் கேட்க தயாராக இல்லை. இன்றும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு  விசாரணையை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதானி விவாகரத்தில் அரசுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லையெனில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்காமல் ஏன் ஓடுகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; ஆர்வத்துடன் வாக்களித்த தலைவர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Leaders who voted with passion for Lok Sabha elections

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Leaders who voted with passion for Lok Sabha elections

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Leaders who voted with passion for Lok Sabha elections

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடி எண் 161இல் வாக்களித்தார். கேரளா மாநிலம் ஆலப்புழாவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.சி. வேணுகோபால் வாக்களித்தார். ராஜஸ்தான் மாநில பாஜகவின் மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா ஜலவாரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு பரவூரில் உள்ள வாக்குச் சாவடியில் கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் வாக்களித்தார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பெங்களூருவில் உள்ள பி.இ.எஸ். வாக்குச்சாவடியில் வாக்களித்தார். எழுத்தாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி பெங்களூருவில் வாக்களித்தார்.

Leaders who voted with passion for Lok Sabha elections

கர்நாடக மாநிலம் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வந்து வரிசையில் காத்திருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நரசிங்பூரில் மத்தியப் பிரதேச கேபினட் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் வாக்களித்தார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது தந்தையுடன் வந்து வாக்களித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பெங்களூருவில் வாக்களித்தார். 

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.