Skip to main content

இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 20 ஆயிரமா?

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

வரும் மே 19ஆம் தேதி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலையடுத்து  தமிழக்தில் அதிமுக ஆட்சி நீடிக்குமா இல்லை கலையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இதனால் திமுக, அதிமுக,அமமுக,மநீம,நாம் தமிழர் கட்சி மற்றும் சில கட்சிகள் தீவிர  பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

ttv



இந்த நிலையில்  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி  அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் பிரச்சாரத்தின் போது  சுந்தர்ராஜை   பதவி நீக்கம் செய்ததால்  தற்போது இடைத்தேர்தல் இந்த தொகுதிக்கு வந்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதற்கு  வாக்களித்தவர் சுந்தர்ராஜ். தற்போது அவர் பதவியை இழந்து உங்கள் முன்பு நிற்கிறார். இரட்டை இலை சின்னம்  துரோகிகள் கையில்  இருக்கும் போது எப்படி வெற்றி அவர்களுக்கு கிடைக்கும்.  இடைத்தேர்தலில் தங்களது ஆட்சியை எப்படியாது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஓட்டுக்கு  ரூ.20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று தினகரன் பேசினார்.   

 

சார்ந்த செய்திகள்