Skip to main content

நீங்க நினைப்பது கனவிலும் நடக்காது... தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரை கடுமையாக விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராம்!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

bjp

 


சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். கரு.நாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு கரு.நாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
 


இந்தச் சம்பவம் குறித்து நடிகையும், அரசியல்வாதியுமான பா.ஜ.க.வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தி.மு.க., வி.சி.க மற்றும் காங்கிரஸ் ஆகியோர் தாங்களே தமிழ்நாட்டிற்குச் சொந்தமானவர்கள் என்றும் தங்களுக்கே தமிழ் மொழி சொந்தமானது என்றும், தமிழ் மொழியை உருவாக்கியவர்கள் நாங்கள் தான் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் மட்டுமே எதாவது பேசிவிட்டு அதில் இருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். அதோடு அவர்களுக்கு என்று ஒரு வரைமுறை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் கடவுளை நம்பவில்லை, எந்தவொரு சனாதன தர்மத்தைப் பின்பற்ற வேண்டாம் என்று மக்களை மூளைச் சலவை செய்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுக்கென்று சொந்த விதிகளை உருவாக்கிக் கொண்டு இந்த மண்ணில் கடவுளாக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள் அது கனவிலும் நடக்க முடியாது என்று கூறியுள்ளார். அதோடு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேவலமான நடிகைகள் என்று கூறிய போது எல்லாம் எங்கே இருந்தார்கள். அப்போது நடிகர் சங்கம், ஜோதிகா, குஷ்பு என்று யாரும் இல்லையே என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்