Skip to main content

ஆண்டிபட்டியில்.... தங்க தமிழ்செல்வனை  எதிர்த்து களம்  இறங்கப்போகும் ஓபிஎஸ் ஆதரவாளர்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
r

 

முதல்வர் எடப்பாடியை  எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேர் கவர்னரிடம் புகார் மனு கொடுத்ததின் பேரில் சபாநாயகர் தனபால் அந்த 18 எம்.எல்.ஏ.களையும் 
பதவி நீக்கம் செய்தார்.  அதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு சென்றும் கூட சபாநாகர் பதவி நீக்கம் செய்தது சரி தான் என டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக தீர்ப்பு  வந்ததை கண்டு டிடிவி  அதிர்ச்சி அடைந்து விட்டார். அதை தொடர்ந்து மேல்  முறையீடு செய்ய இருந்த டிடிவி திடீரென  தேர்தலை சந்திக்க தயார்  என பின்தங்கி விட்டார்.
  

     இந்த நிலையில் ஆளும் இபிஎஸ் ஓபிஎஸ்  ஆட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அதுபோல் திமுக உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில்  குதிக்க தயாராகி வருகிறது.  

 

an


    இந்த நிலையில் தான் பதவி நீக்கம் செய்ய பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.கள் 18 பேரும் அந்தந்த தொகுதியில் களம் இறங்க  தயாராகி வருகிறார்கள்.


        இதுபோல் தான் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் டிடிவியின் தீவிர ஆதரவாளரரும், மக்கள்  முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் களம் இறங்க இருக்கிறார்.
      ஏற்கனவே தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இருந்த போது ஓபிஎஸ்சை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் பண்ணிக் கொண்டு தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். அதன் மூலம் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டத்தில் ஆதரவாளர்கள்  இருந்து வந்தனர்.  தற்பொழுது அவர்களில் பெரும்பாலானவர்கள்  தங்கதமிழ்செல்வன் பக்கமே போய்விட்டனர்.  அந்த அளவுக்கு கட்சியையும் உடைத்து இருக்கிறார்.  அதோடு சாதி ரீதியாக உள்ள  கட்சிகாரர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு மாவட்டத்தில் டிடிவி அணிக்கு வலுசேர்த்து வருகிறார். 

 

 இதற்கு எல்லாம் இந்த  இடைத்தேர்தல் மூலம்  ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது தீவிர ஆதரவாளரான மாவட்ட துணை செயலாளர்  முறுக்கோடை ராமரை அதிமுக சார்பில்  களம் இறக்க தயாராகி வருகிறார்.  இந்த முறுக்கோடை ராமர்  ஆரம்பகாலத்திலிருந்து  கட்சியில் இருந்து வருகிறார்.    கடந்த உள்ளாட்சி தேர்தலில் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்து  இருக்கிறார்.   இந்த ராமர் ஓபிஎஸ் சின் சமூகத்தை சேர்ந்தவராக 
இருந்தாலும் கூட அனைத்து சமூகத்தினருடனும் நெருக்கமாக பழக கூடியவர்.  அதோடு கட்சி பொறுப்பாளர்களையும்  தொண்டர்களையும்  அரவணைத்து போக கூடியவர்.   தொடர்ந்து  ஒவ்வொரு முறையும்  சீட்டு கேட்டு வருகிறார்.  
அதுபோல் இந்த முறையும் சீட்டு கேட்டு வருகிறார்.  

 

t

 

 தற்பொழுது ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் ராமருக்கு தான்  ஓபிஎஸ் சீட்டு கொடுத்து அதன் மூலம் தங்க. தமிழ்ச்செல்வனை ஓரம் கட்ட ஓபிஎஸ்  இப்பவே தயாராகி வருகிறார் என்ற பேச்சு கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.   இருந்தாலும்  தங்கதமிழ்செல்வன் முக்குலத்தோரில் உள்ள  பிரமலைக்கள்ளர்  சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தை சேர்ந்த ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளரும்  ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான லோகிராஜனையும் தங்க தமிழ் செல்வனுக்கு எதிராக களம் இறக்கவும் ஓபிஎஸ்  தயாராகி வருகிறார்.

 

  இப்படி  இரண்டு  ஆதரவாளர்களான முறுக்கோடை ராமர்  அல்லது லோகிராஜன் இருவரில் ஒருவரை ஓபிஎஸ்  களத்தில்  இறக்கி  இந்த  இடைத்தேர்தல் மூலம் தங்கதமிழ்செல்வனை படு தோல்வி அடைய வைத்து  அரசியலை விட்டே  விரட்ட ஓபிஎஸ்  தயாராகி வருகிறார்  என்ற பேச்சு கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.   


இந்த நிலையில் தான்  தங்கதமிழ்செல்வனும் தேர்தலுக்கான பணிகளை உசிப்பி விட்டு கட்சிகாரர்களை  ஒருங்கிணைத்து வருகிறார்.    இருந்தாலும்  கடந்த  இரண்டு வருடங்களாக  மேல்மட்டட அரசியலில்  தங்கதமிழ்செல்வன்  குதித்தால் தொகுதிக்கும் சரிவரபோகவில்லை.  இதனால் தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும்  நிவர்த்தி செய்ய வில்லை  என்ற பேச்சும் இப்பவே தொகுதி மக்கள் மத்தியில் பரவலாக  எதிர் ஒலித்தும் வருகிறது .

 

சார்ந்த செய்திகள்