Published on 03/09/2019 | Edited on 03/09/2019
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் குறித்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போது, யாராவது எழுதி தருவதை சொல்வது தான் ஸ்டாலினுக்கு வேலை அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். அதோடு முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் நல்ல முறையில் அமைந்து உள்ளது. ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் இன்றி வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு மிகவும் அவசியம்.
அதனால் நாம் அவர்களை நாடி சென்று தமிழகத்தின் நிலையை எடுத்து சொல்லி, தமிழகத்தில் அதிகம் படித்த மாணவர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் தமிழகம் மிகவும் அமைதியான மாநிலம் என்று எடுத்துரைத்தால் மட்டுமே முதலீடு கிடைக்கும் என்று கூறினார். பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ள முதல்வரை பாராட்ட மனமில்லாமல் பொறாமையில் குற்றம்சாட்டி ஸ்டாலின் பேசுகிறார். மேலும் யாராவது எழுதி கொடுப்பதை தான் ஸ்டாலின் பேசுகிறார் அதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதற்கான சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.