Skip to main content

ஒரே மேடையில் திமுக, அதிமுக... என்னால ஐயாயிரம் பேரைத்தான் திரட்ட முடியும்... மீண்டும் அமைச்சர் பதவியில் மணிகண்டன்? 

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

பதினோரு மாவட்டங்களில் பதினான்கு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணத்தை மார்ச்.01-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறார் முதல்வர் எடப் பாடி. முதல்வரின் முதல் நிகழ்ச்சியாக 01—ஆம் தேதி காலை ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.

அரசு முறை பயணம் என்றாலும் அந்த மாவட்டங்களில் கோலோச்சும் கோஷ்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பஞ்சாயத்துகளை நடத்தும் முனைப்பிலும் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

மற்ற மாவட்டங்களில் இரண்டு, மூன்று கோஷ்டிகள் என்றால், இராமநாதபுரம் அ.தி.மு.க.வில் ஏழெட்டு கோஷ்டியாக பிரிந்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விழாவிற்கு ஆட்களைத் திரட்டுவது எப்படி என ஆளாளுக்கு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அரவணைப்பில் இருக்கும் மா.செ. முனியசாமி, மாஜி அமைச்சர் மணிகண்டன், மாஜி எம்.பி. அன்வர்ராஜா, பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் என தனித்தனியாக ஆலோசித்து, 25 ஆயிரம் பேரைத் திரட்டுவது மா.செ.முனியசாமியின் பொறுப்பு என முடிவெடுத்திருக்கிறார்கள்.

இது முனியசாமியின் காதுக்கு எட்டியதும் "எல்லாத்துலயும் பங்கு கேட்பவர்கள் இதுலயும் பங்கு கேட்க வேண்டியது தானே.

என்னால ஐயாயிரம் பேரைத்தான் திரட்ட முடியும்' என உதயகுமாரிடம் சொல்லிவிட்டாராம். பார்த்தார் உதயகுமார், பயனாளிகள்னு சொல்லி 20 ஆயிரம் பேரைத் திரட்டுங்க என கலெக்டர் வீரராகவ ராவ்விடம் சொல்ல... அவரும் எஸ் பாஸ் என்றாராம்.

 

admk



சென்னையிலிருந்து 01-ஆம் தேதி காலை விமானத்தில் புறப்பட்டு, 6.05 மணிக்கு மதுரை வரும் வரை எடப்பாடிக்கு பிரச்சனையில்லை. அங்கிருந்து சாலை மார்க்கமாக பரமக்குடி வழியாக இராமநாதபுரம் செல்வதுதான் சுலபமான வழி. ஆனால் பாலம் வேலை நடப்பதை காரணம் காட்டி, கமுதக்குடி புறவழிச்சாலை வழியாக இராமநாதபுரம் செல்ல ஏற்பாடு செய்துவிட்டார்களாம். காரணம், பரமக்குடியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால்.


அதே போல் மருத்துவக் கல்லூரி அடிக்கல்நாட்டு விழா முடிந்ததும் மாஜி எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் முதல் வருக்கு மதிய விருந்து அளிக்க தடபுடல் ஏற்பாடுகள் நடக் கிறதாம். "சி.ஏ.ஏ.வால்தான் உள்ளாட்சித் தேர்தலில் எனது மகனும் மகளும் தோற்றார்கள்' என ஓப்பனாகவே பேட்டி கொடுத்து புலம்பியவர் அன்வர்ராஜா என்பதால் இந்த ஏற்பாடு. அதே போல் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான ஏர்வாடிக்கு எடப்பாடி சென்றால் எப்படி இருக்கும், எதிர்க்கட்சிக் கூட்டணி எம்.பி.யான நவாஸ் கனியை அரசு நிகழ்ச்சி மேடையில் ஏற்றினால் எப்படி இருக்கும் என்பதையும் தீவிரமாக யோசித்திருக்கிறது அரசு தரப்பு.

இந்த நிலையில் மாஜி அமைச்சரான மணிகண்டன், தனது வக்கீல் மனைவி மூலம் டெல்லியை காண்டாக்ட் பண்ணி தமிழக அமைச்சரவையில் வெயிட்டான போஸ்ட்டிங்கில் மீண்டும் பதவியேற்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.

 

 

சார்ந்த செய்திகள்