Skip to main content

பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்ரீபிரியா..! (படங்கள்)

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பலரும் அவர்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே போல், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா தொடர்ந்து தொகுதி முழுவதும் திறந்த ஆட்டோவில் நின்றபடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மக்களோடு ஒன்றாத பாஜக அரசை அப்புறப்படுத்த வேண்டும்" - கமல்ஹாசன்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024

சிதம்பரம் மேல வீதியில் திமுக கூட்டணியில்  விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து புதன்கிழமை இரவு மக்கள் நீதி மையம் தலைவர்  கமல்ஹாசன் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  பாஜக ஒன்றிய அரசு அல்ல, மக்களோடு ஒன்றாத அரசு; இதனை அப்புறப்படுத்த வேண்டும். குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தையாக திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். அவரை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவில் கூடியிருந்த பொதுமக்களிடம் வலியுத்தி பேசினார்.

மேலும் அவர், "எல்லா சித்தாந்தாங்களும் மக்களுக்காக தான். அதற்காக தான் நாங்கள் அனைவரும் தோலுரசி களம் கண்டு வருகிறோம். பாஜக இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று அறிஞர்கள் கவலைப்படுவார்கள். நாங்கள் வீரர்கள் களம் கண்டு வருகிறோம். நாங்கள் தியாகம் செய்யவில்லை வியூகம் செய்துள்ளோம், இன்றைய தேவையை அன்றே உணர்ந்து வந்தவர் திருமாவளவன். மானுட சமூகம் பின்னோக்கி இழுக்கப்படும் என்று தன் வாழ்வை சமூகத்திற்கு கொடுத்தவர். எதிரிகளை ஜனநாயகப் படுத்துவது என்றால் எதிரிகள் யாருமில்லை என்று உணர்வது தான்.

நான் சாதியம் தான் என் வாழ்வின் முதல் எதிரி என்று அரசியலுக்கு வருவதற்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். சாதிகள் இல்லை. எனது படங்களில் சாதி பெயர் வருகிறது என்று நீங்கள் நினைக்கலாம், குடியை பற்றி படம் எடுக்க வேண்டும் என்றால் குடிகாரனைத்தான் மையப்படுத்த வேண்டும், அது போல தான் இது. இன்னும் எத்தனை பேர் அடிமை விலங்கோடு  உள்ளனர் என்பதை அறியவே சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம். ஆங்கிலேயர்கள் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சனாதனவாதிகள் பதறினார்கள். மண்டல் கமிஷனை விபி சிங்  அமல்படுத்த முயன்றபோது அதனை தடுக்க முயன்றவர்கள் தான் சனாதானவாதிகள்.  தமிழக மீனவர்களை‌ காக்கத்தவறியது இந்த பாஜக அரசு.. 10 ஆண்டுகளில் மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை. விவசாயிகள் பிரச்சனையில் ஆதார விலையை தராமல், ஆதரவு விலையை தருவதாக கூறினார்கள், எதையும் செய்யவில்லை. இதனை எதிர்த்த விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் குண்டு வீசியும்  ஆணிப்படுக்கையும் அமைத்து எதிரியைப்போல நடத்தினார்கள்.

உனக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு நான் நகரத்தில் இருந்தாலும், தினமும் சோறு சாப்பிடுகிறேன். அந்த நன்றிக்கு தான் பேசுகிறேன். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார்கள். ஆனால் ஒருவருக்கும் வேலை கொடுக்கவில்லை. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மலிவுவிலையில் மக்கள் சொத்தை வாரி வழங்கி வருகின்றனர். சட்டத்தை வளைத்து அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் முறை தான் தேர்தல் பத்திரத்திட்டம். தொழிலதிபர்களை வழிக்கு கொண்டு வர அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக ஏவி வருகிறது. தமிழர்களின் குரலாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருமா ஒடுக்கப்பட்டோருக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு என அனைவருக்குமான தலைவர். சமத்துவ அரசியல் சமையலுக்கு உகந்தது பானை. பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது. இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்கும் அளவுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து திருமாவளவனை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.  வேட்பாளர் திருமாவளவன், திமுக மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏரானமானவர்கள் கலந்து  கொண்டனர்.

Next Story

"எங்க மம்மிக்கு சப்போர்ட் பண்ணுங்க" - அம்மாவுக்காக வாக்கு சேகரித்த மகள்!

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

ரகத


தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் தெருத்தெருவாக சென்று தங்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். மேலும் சிலர் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. சில வேட்பாளர்கள் டீ கடையில் வாக்கு சேகரிக்கும் போது டீ போடுவது, சலவை கடை இருந்தால் துணிகளை சலவை செய்வது, ரோட்டை கூட்டுவது என விதவிதமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகிறார்கள். குறிப்பாக நாகையில் வேட்பாளர் ஒருவர் உணவு விடுதி ஒன்றில் புரோட்டா போட்டு கொடுத்து புரோட்டா மாஸ்டரையே அசரவைத்த சம்பவமும் நடைபெற்றது.

 

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட திருவொற்றியூர் 2 வார்டு பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக போட்டியிடுபவர் நித்யா. அவரின் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்  கடந்த சில நாட்களாக அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் பிரச்சாரத்துக்கு உதவியாக அவரின் எட்டு வயது மகளும் உடன் வருகிறார். வாக்காளர்களுக்கு தன் கைகளால் நோட்டீஸ் வழங்கும் அந்த சிறுமி, ”எங்க மம்மிக்கு சப்போர்ட் பண்ணுங்க” என்று குழந்தை முகம் மாறாது வாக்குகேட்டு செல்கிறார். வேட்பாளரை பார்த்ததும் பரபரப்பாக வரும் வாக்களார்கள் இந்த சிறுமியின் முகத்தைக் கண்டதும் சிரித்தவாறே நோட்டீஸை பெற்றுக்கொண்டு வாக்களிப்பதாக உறுதி அளிக்கிறார்கள். தற்போது அந்த சிறுமி வாக்கு கேட்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.