Skip to main content

13 பேரை கொன்ற படையப்பா... பெயரை கேட்டாலே அலரும் அதிகாரிகள்!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் சுற்றித்திரியும் ஒரு யானை, கடந்த சில நாட்களாகவே கன்னிமலி மலைப் பாதையின் குறுக்கே நின்றுகொண்டு பொது மக்களையும் அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தி வருகிறது என்று கேரள வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்று மூணாறு, மறையூர் செல்லும் மலைப் பாதையில் வாகனங்களை மறித்து நின்றுகொண்டு தன் பாணியில் போக்குவரத்தை இடையூறு செய்துள்ளது படையப்பா என்ற யானை.


அதென்ன படையப்பா என்று பெயர்? என்று கேட்டால், ரஜினியின் வெற்றி படமான படையப்பா படத்தின் கம்பீரத்தை கருத்தி கொண்டு வைக்கப்பட்ட பெயர் தான் படையப்பா என்று தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். இதுமட்டும் இன்றி கேரள வனப்பகுதிகளில் இதுவரை சுமார் 13 பேரை கொன்றுள்ள கொலைகார யானை என்கிற பட்டமும் இந்த படையப்பா யானை பெற்றுள்ளது. அதேபோல நேற்று மலைப்பாதையை மறித்தபோது, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேரள வனத்துறையினர் எவ்வளவு முயற்சித்து விரட்டியும் நகராத படையப்பா யானை சிறிது நேரம் கழித்து தானாகவே அங்கிருந்து நகர்ந்து சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்