Skip to main content

நாக்பூரில் ஒருவார கால ஊரடங்கு; வெறிச்சோடிய சாலைகள்

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

j


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அங்குதான் தினமும் அதிகம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அங்கு ஏற்கனவே சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாக்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 1,800 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாக்பூர் காவல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மார்ச் 15 முதல் 21ஆம் தேதி வரை அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், இன்று (15.03.2021) காலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்