Skip to main content

"நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

union health ministry

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுநேரத்தில் மூன்றாவது அலை ஏற்படுமென நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

 

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தடுப்பூசி செலுத்தத்தொடங்கிய பிறகு மக்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க நாம் தொடங்கிவிட்டோம். ஆனால் நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் .

 

 

சார்ந்த செய்திகள்