திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கு நேரத்தில் இந்தியாவில் பெரிய கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 6ஆம் கட்ட ஊரடங்கின் போது அளிக்கப்பட்ட சில தளர்வுகளின் அடிப்படையில் சில கோயில்கள் திறக்கப்பட்டது. ஆனால், பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இந்தியாவில் பல கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் பலருக்கு கரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதற்கிடையே இன்று பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.