சபாி மலைக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிக்கிறாா்.
மண்டல மகர பூஜைக்காக இன்று மாலை சபாிமலை நடை திறக்கப்படுகிறது. நாளை காலை முதல் ஐயப்பனை தாிசிக்க பக்தா்கள் அனுமதிக்க படுகிறாா்கள். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவையெடுத்து அனைத்து வயது பெண்களையும் சபாிமலைக்கு அனுமதிக்கும் நடவடிக்கையில் கேரளா அரசு இறங்கியுள்ளது.
இதற்கு ஓட்டு மொத்த அய்யப்பா பக்தா்களும் பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகளும் எதிா்ப்பு தொிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில் சபாிமலைக்கு செல்ல புனேவில் இருந்து விமானம் மூலம் 5 பெண்களுடன் திருப்தி தேசாய் இன்று அதிகாலை 3 மணிக்கு கொச்சி நெடும்பாசோி விமான நிலையத்துககு வந்தாா்.
இதையறிந்த இந்து வேதி அமைப்பினா் மற்றும் பா.ஜ.க வினா் விமான நிலையத்தை முற்றுகையிட்டு திருப்தி தேசாய் வெளியேவருவதை தடுக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் விமான நிலையத்திற்குள் இருந்து வெளியே வரமுடியாமல் திருப்தி தேசாய் தவிக்கிறாா்.
மேலும் விமான நிலையத்தில் உள்ள ப்ரி பெய்டு கால் டாக்சி மற்றும் ஆன்லைன் டாக்சி ஓட்டுனா்களும் திருப்தி தேசாய்க்கு வாகனம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனா். இதையும் மீறி போலீஸ் பாதுகாப்போடு அழைத்து சென்றால் வழி நெடுகிலும் அவரை தடுத்து பேராட்டம் நடக்கும் என்று போராட்ட காரா்கள் எச்சாித்துள்ளனா்.
இந்த நிலையில் போலிசாா் திருப்தி தேசாயிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.