பக

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களை வாங்க மக்கள் விரும்புவதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், பிரபல ஓலா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு ஒன்று மோட்டார் வாகனத்துறையில் மிகுந்த சலசலப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எங்கள் நிறுவனத்தின் ஃபியூச்சர் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும்.தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் பெண்கள் பணியமர்த்தப்படுவார்கள். இது முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.