Skip to main content

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

17-வது மக்களவை தேர்தல்  நாடு முழுவதும் ஏழு கட்டடங்களாக நடைபெற்று வருகிறது . ஏற்கெனவே நான்கு கட்ட மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் , இன்று ஐந்தாவது கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது . இந்நிலையில் இன்னும் 2 கட்ட மக்களவை தேர்தல் மட்டும் நிலுவையில் உள்ள நிலையில் , அதும் முடிந்தவுடன்  மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது . அதனைத் தொடர்ந்து மாநில அரசியல் கட்சிகள் மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர் .இதன் ஒரு பகுதியாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை , தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று மாலை 6.00 மணியளவில் திருவனந்தப்புரத்தில் சந்தித்து பேசவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .

 

 

TELANGANA CM

 

 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் பிரதமர் நரேந்திரமோடியே நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . அதே போல்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக கட்சி மட்டுமே பிரதமர் வேட்பாளர் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது . எனினும் மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுக்கு பின்பே பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் மத்தியில் மூன்றாவது அணி உருவாக்கும் முயற்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் இன்று முதற்கட்டமாக பினராயி விஜயன் மற்றும் சந்திர சேகரராவ் சந்திப்பு நடைப்பெறவுள்ளது . காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3 வது அணி குறித்த தீவீர ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் முன்னெடுத்துள்ளனர் . ஏற்கெனவே முன்பு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சி எடுத்தார் பின்பு அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தத்க்கது .

 

 

 

சார்ந்த செய்திகள்