Published on 28/06/2021 | Edited on 28/06/2021

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் அமைந்துள்ள முன்னாள் சிறப்பு காவல் அதிகாரி ஃபயாஸ் அகமது வீட்டில், நேற்று (27.06.2021) இரவு தீவிரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஃபயாஸ் அகமதுவும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ஃபயாஸ் அகமதுவின் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் இந்தச் சம்பவம் நடந்த இடத்தை ஏற்கனவே காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விசாரணை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.