Skip to main content

புதுச்சேரி ஆளுநர் ஹிட்லரின் தங்கை... மீண்டும் சர்ச்சையில் புதுச்சேரி முதலமைச்சர்...

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை ஹிட்லரின் தங்கை என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

narayana saamy

 

 

இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும் இன்று காலையில் மரியாதை செலுத்தினார். 

இந்நிலையில், இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராணயசாமி, “எந்தவித அதிகாரங்களும் இல்லாமல் அதிகாரிகளை மிரட்டுவது போன்ற  செயல்களில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருகிறார். மாநில மக்களையும், வளர்ச்சியையும் பற்றி கவலைப்படாமல் கிரண்பேடி, தர்பார் நடத்திவருவகிறார். அதிகாரிகளை தினந்தோறும் வசைபாடும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக கிரண் பேடியை பேய் என்றும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி. 

 

 

சார்ந்த செய்திகள்