Skip to main content

பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்த நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அக்டோபர் 1 முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்திருந்தது. அதன்பிறகு புதிதாக விண்ணப்பித்தே பான் கார்டு பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பான்- ஆதார் இணைக்க இன்று முதல் ரூபாய் 1000 அபராதம்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

1000 rupees fine for linking PAN-Aadhaar from today!

 

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க அபராதத்துடன் கூடிய அவகாசம் இன்று (01/07/2022) முதல் அமலுக்கு வருகிறது. 

 

பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்க, கடந்த மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பலமுறை ஏற்கனவே, அவகாசம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 31- ஆம் தேதிக்குள் இணைக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதத்துடன் ஜூன் 30- ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இது முடிவுக்கு வந்த நிலையில், இன்று (01/07/2022) முதல் ரூபாய் 1,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை, இந்த அபராதத்துடன் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. 

 

1000 rupees fine for linking PAN-Aadhaar from today!

 

அதன் பிறகும் இணைக்காதவர்களின் பான் கார்டு எண்கள் முடக்கப்படும் எனத் தெரிகிறது. பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்கள் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

 

Next Story

பான் கார்டை ஆதாருடன் இணைத்துவிட்டீர்களா? - தவறினால் நாளை முதல் அபராதம்!

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

pan card aadhar card link

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும். 

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வரும் மத்திய அரசு, அதற்கான கால அவகாசத்தையும் பல்வேறு முறை நீட்டித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், பின்னர் மார்ச் 31ம் தேதிவரை இந்தக் காலக்கெடுவானது நீட்டிக்கப்பட்டது. 

 

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்தக் காலக்கெடுவானது இன்றுடன் முடிவுக்கு வருவதால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி தேதியாகும். நாளை முதல் ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது

 

அதன்படி, ஏப்ரல் 1 க்கு பிறகு அடுத்த மூன்று மாதங்களுக்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்தால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குப் பிறகு இணைப்பதற்கு ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்..

 

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

 

1. http://incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.