Skip to main content

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு 'ஒமிக்ரான்'

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

'Omigron' for 21 people in India so far

 

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.

 

இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா-8, குஜராத்-1, டெல்லி-1 என இந்தியாவில் 'ஒமிக்ரான்' பாதிப்பு மொத்த எண்ணிக்கை 12 ஆக கண்டறியப்பட்ட நிலையில், தற்பொழுது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே நாளில் 9 பேருக்கு 'ஒமிக்ரான்' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இன்று (5/12/2021) இரவு 8.25 மணி நிலவரப்படி இதுவரை 'ஒமிக்ரான்'' வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்